Konjam Amutham Konjam Visham
Description:
எப்போதும் மனிதன் ஆனந்தத்தோடு பணியாற்று, என்றும் அமைதி கிடைக்கும் என்பதுதான் சத்குரு அவர்களின் தாரக மந்திரம். அதேநேரத்தில் வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில் படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராள பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும். இலக்கின் மீது ஒரு கண்ணைப் பதித்துக் கொண்டால், மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்? செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். வெற்றி இலக்கை சுலபமாகத் தொட்டுவிட முடியும் என்று வழிகாட்டுகிறார் சத்குரு. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வாழ்க்கை பற்றியும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தால் தங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறார்கள், அப்படிப்பட்ட அன்பர்களுக்கு ‘‘கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்’’ நூலில் அற்புதமான விளக்கங்களை அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் சத்குரு அவர்கள். அத்தோடு எனக்குத் தெரியாது என்று நீங்கள் ஆழமாக ஒப்புக்கொள்ளும் போதுதான் தேடல் சாத்தியாமாகிறது. எனக்குத் தெரியாது என்ற அந்த வெற்றிடம் உங்களிடம் உருவாகி விட்டால், நான் அங்கு வெளிப்படுவேன் வேறெங்கும் என்னைத் தேடத் தேவையில்லை என்ற அன்பர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார். சுபாவின் எளிமையான உரைநடையில், ஆனந்த விகடனில் வெளிவந்த தொடரின் தொகுப்பே இந்நூல்